i/TamilNadu
  • புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இருபது இருபத்தஞ்சு! இருப்பதை enjoy பண்ணு!! நாலரை Billion சொத்து சேத்து ஐயாயிரம் மட்டுமே கணக்கிருக்கு ஏறுது ஏறுது கணக்கு மேல, Rocket போகுது போகுது Uranus தாண்டி! தேடுற அந்நியன் தேடி தேடி, போர் தொடுக்குற வேகமா புரியவில்லை! வாழுற பூமியை குண்டு போட்டு, ஏவிய கணைகளை தொலைக்க வேணும்! பீரங்கி, Rocket Launcher தொலைஞ்சு போக வேண்டுறோம்! கிடைக்குமா புது வருச பரிசா? சூரிய சக்தியை சேத்து வைக்க ஓடுது ஓடுது காரு, லாரி! வானத்தில் மிதக்குற ராக்கெட் கூட தின்னுது பகலவன் தந்த சக்தி! அறிவியல் அடுத்தொரு வடிவமெடுத்து ஆடுது, பாடுது, அடுத்த Version... ஆளுமோ நம்மையே காலம் சொல்லும்! ஓட்டுக்கு நாம தான் கணக்கு வேணும்! மத்த வேலைய பாக்குமோ எந்திரங்கள்! டீவிய ஒடைச்சு தான் வெளிய போனா... இணைய வலைய தான் கிழிச்சிட வழியுமில்லை! அறிஞ்சிட தேடிட தொடங்கப்போனா, முடியவே யில்லையே எதையுமிங்கே! விளை யாட்டுல ஜெயிக்கிற நாடு வேணும்! சேக்குற போட்டிய தூரப்போட்டு... பயன்படுத்துற போட்டிதான் தொடங்க வேணும்! சிரிக்கிற முகங்களும் கூட வேணும்! அறிவியல் நம் கைக்குள்ளே அடங்க வேணும்! தாய் தந்தையை மதிக்கிற நாட்கள் வேணும்! இதுநாள் வரைப் பொக்கிஷம் காக்க வேணும்! தீட்டிட தீட்டிட வைரமாகும் எம் பாட்டனும் பாட்டியும் தந்த சேதி - உணர்ந்திடும், அறிந்திடும் அறிவு வேணும்! கொடுக்குமோர் காலமே வந்ததென்று நம்புவோம்! நம்பிட நடக்கிற நாளு தானே!!! கடந்தவை ஒருமுறை நிருத்திப் பார்த்தோம்! அடுத்தொரு செயல்தனை தொடங்க போறோம்! வெல்வோமே வெல்வோமே நல்ல பூமி செழிக்கணும் செழிக்கணும் எமை பெற்றதாலே! புத்தாண்டு வாழ்த்துக்கள் உலகமெல்லாம்! புதுமையாய் பிறக்குது இவ்வருடம்!
    13

© 2025 Indiareply.com. All rights reserved.