-
அம்மாவுக்கு பிறந்த நாள்
மேதையிலே பெரும்மேதை மாமேதை! மன்னரிலே தலைமை கொள்ள மாமன்னர்! மனிதரவர் உயர்வுற்றால் மாமனிதர்! 'மா' வேண்டி பெரும்பாடு அவர்க்கு எல்லாம்! மா- பின் தள்ளி உயர்ந்து நின்றாள் அம்மா! பத்து மாதக் கணக்கெல்லாம் யாரு சொன்னா? இந்த நிமிஷம் வரை என்னைத்தூக்கி சுமப்பவ தான் எங்க அம்மா! பிறந்ததும் கை தூக்கி, தோள் சுமந்து, கை பிடிச்சு நடை கொடுத்து, பள்ளி சுமை சுமந்து, நிலைக்கு வர்ற வரை எடுத்து சுமந்தவ தான்! நிதமும் நெஞ்சில் சுமந்த! சுகமா நான் உயர என் கனவையும் சேத்து சுமந்தவ நீ! பிள்ளைக்கு வரம் வாங்க கோவில் குளம் நீ போவ! தர்ற கடவுள்கிட்ட பிள்ளைங்க பட்டியல்ல நண்பர் குடும்பமெல்லாம் சேத்து நீட்டுவ! உனக்குனு வரம் எப்பவும் கேட்டதா நினைவிருக்கா? ஒருவேளை உங்கம்மா கேட்டிருப்பா ... உலகத்துக்கே வரம் வேணும்னு! நீ வர வேணும்னு! பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா!!1
© 2026 Indiareply.com. All rights reserved.
tanishasahu0911