Community Information
-
தமிழ் உறவுமுறைகளில் ஒரு ஐயம்
தந்தை வழித் தங்கை, ஒருவருக்கு அத்தை முறை ஆகிறார். அவரது மகன்/மகள், மணமுடிக்கும் முறை ஆகிறார்கள். ஆனால் தாய் வழித் தங்கை சித்தி ஆகிறார், அவர் பிள்ளைகள் ஒருவருக்கு சகோதர, சகோதரிகள் ஆகின்றனர். அது எதனால்? நான் கேள்விப்பட்ட வரையில் எனக்கு கிடைத்த பதில், அத்தையின் வழி மாமா வெளி உறவாக இருப்பதால், பிறக்கவிருக்கும் பிள்ளைக்கு ஆரோக்கியமான மரபணு வருவதாக சொல்லப் படுகிறது. ஆனால் எனக்கு இது ஏற்புடையதாகப் படவில்லை. சித்தி வழி வரும் சித்தப்பாவும் வெளி உறவாக இருக்க வாய்ப்பு இருப்பினும் உறவு அவ்வாறு எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. என்னைப் பொறுத்தவரை, அத்தை ஆயினும் சித்தி ஆயினும் சகோதர சகோதரியாக வளர்த்தலே நன்று. வேறு ஏதேனும் காரணம் தெரிந்தால் சொல்லவும்!1
© 2025 Indiareply.com. All rights reserved.